உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விபத்து சாலையில் குடிநீர் திட்ட கேட் வால்வு

விபத்து சாலையில் குடிநீர் திட்ட கேட் வால்வு

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே அகலப்படுத்தப்பட உள்ள சாலையில் மேலும் விபத்துக்கு வழி ஏற்படுத்தும் வகையில் காவிரிகுடிநீர் திட்ட கேட் வால்வு தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது.இவ்வொன்றியத்தில் பிரான்மலையில் இருந்து முட்டாகட்டி செல்லும் சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதுவரை பலர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர், சிலர் இறந்தும் உள்ளனர். இச்சாலையை அகலப்படுத்த அப்பகுதி மக்கள் பலமுறை நெடுஞ்சாலைத்துறையிடம் வலியுறுத்தினர். இது குறித்து தினமலரிலும் செய்தி வெளியானது.இந்நிலையில் தினமலர் செய்தி எதிரொலியாக இச்சாலையை அகலப்படுத்துவதற்கான பூர்வாங்க அளவீட்டு பணி துவங்கியுள்ளது. ஆனால், இச்சாலை ஓரத்தில் காவிரி குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டு, அதற்காக சில இடங்களில் கேட் வால்வு தொட்டி கட்டப்படுகிறது.ஏற்கனவே சாலை குறுகலாக இருக்கும் பட்சத்தில் சில அடி தூரத்தில் இத்தொட்டிகள் கட்டப்படுவதால் சாலை அகலப்படுத்தப்படும் போது விபத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கேட்வால்வு தொட்டிகளை போக்குவரத்திற்கும், சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறு இல்லாமலும் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !