உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலைப்பணியை தடுத்ததாக வனத்துறை மீது குற்றச்சாட்டு

சாலைப்பணியை தடுத்ததாக வனத்துறை மீது குற்றச்சாட்டு

சிவகங்கை:சிவகங்கை அருகே பொன்னாம்பட்டியில் சாலைப் பணியை தடுத்ததாக வனத்துறை அதிகாரிகள் மீது ஒப்பந்தகாரர் குற்றம் சாட்டியுள்ளார்.சிவகங்கை மாவட்டம் பெரியகிளுவச்சியை சேர்ந்த கந்தசாமி, இவர் எஸ்.பி.,அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் இலுப்பக்குடியில் இருந்து கருங்காலக்குடி வரை தார்சாலை அமைக்க ஒப்பந்தம் பெற்று வேலை செய்து வருகிறேன். நேற்று மதியம் 12:00 மணிக்கு வனத்துறை அதிகாரிகள் டிரைவரை தாக்கி இயந்திரத்தை எடுத்து சென்றதாகவும், டிரைவரை தாக்கிய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதுகாப்பு வழங்க கோரி எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தார்.சூரக்குளம் ஊராட்சி தலைவர் மலைச்சாமி கூறுகையில், சாலை அமைக்க கடந்த 20 நாட்களாக பணி நடக்கிறது. வனத்துறை நேற்று தடுத்ததில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது., என்றார்.மாவட்ட வன அலுவலர் பிரபா கூறுகையில், வனத்துறை இடத்திற்குள் சாலை செல்கிறது. வனத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் சாலை பணியை செய்து வருகின்றனர். அவற்றை தடுப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். ஊழியர்கள் மீது பொய்யாக புகார் அளித்துள்ளார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை