உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் ரூ.3.5 கோடியில் மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம்

மானாமதுரையில் ரூ.3.5 கோடியில் மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம்

மானாமதுரை: மானாமதுரை நகராட்சியில் 15வது நிதிக்குழு சுகாதார மானிய திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டடம் கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்து அவர் கூறியதாவது:தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை இன்னும் ஓரிரு நாட்களில் சரியாகும்.இரண்டு நாட்களுக்கு முன்பு 2500க்கும் மேற்பட்ட டாக்டர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.மேலும் தேவைக்கு கூடுதலாக 300 டாக்டர்களும் தேர்வாகி உள்ளனர். முதல்வர் மருந்தகத்திற்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை