உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை -டூ திருக்கோஷ்டியூருக்கு அரசு பஸ்சில் கூடுதல் கட்டணம் * பயணிகள் அதிருப்தி

சிவகங்கை -டூ திருக்கோஷ்டியூருக்கு அரசு பஸ்சில் கூடுதல் கட்டணம் * பயணிகள் அதிருப்தி

சிவகங்கை:சிவகங்கையிலிருந்து திருக்கோஷ்டியூருக்கு மாசி தெப்ப திருவிழாவிற்காக இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் மாசி மகம் திருவிழா மார்ச் 5 கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பெருமாள் சீதேவி, பூதேவியருடன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார்.இவ்விழாவிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திருக்கோஷ்டியூர் வருவர். சில நாட்களாக பல்வேறு மாவட்ட பக்தர்கள் திருக்கோஷ்டியூர் தெப்பத்தில் நேர்த்திகடனமாக விளக்கு வைத்து, எடுத்து செல்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று(மார்ச் 14) நடக்கும் தெப்ப திருவிழாவையொட்டி கூட்டம் அதிகம் இருக்கும்.இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிவகங்கை, திருப்புத்துார், காரைக்குடி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். சிவகங்கையில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு செல்ல அரசு பஸ்சில் ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. நேற்று திருக்கோஷ்டியூருக்கு பஸ்சில் சென்ற ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.* வழக்கமான நடைமுறை தான் :அரசு போக்குவரத்து கழக அதிகாரி கூறியதாவது: திருவிழா கால சிறப்பு பஸ்களில் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கை தான் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை