உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை வீர அழகர்கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் துவக்கம்

மானாமதுரை வீர அழகர்கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் துவக்கம்

மானாமதுரை : மானாமதுரை வீர அழகர்கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்திற்காக உற்ஸவர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு மண்டபத்தில் எழுந்தருளினார் பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து செட்டிகுளம் வெற்றி விநாயகர் கோயிலுக்கு வீர அழகர் கருட வாகனத்தில் எழுந்தருளினார். அங்கு செட்டிகுளம் கிராம பிரமுகர்கள் வீர அழகரை வரவேற்று சிறப்பு பூஜைகளை நடத்தினர்.திருக்கல்யாணம் வரும் 18ம் தேதி மாலை 6:00 மணியிலிருந்து இரவு 7:35 மணிக்குள் நடைபெற உள்ளது. 21ம் தேதி மாலை 6:00 மணியிலிருந்து6:30 மணிக்குள் தேரோட்டமும், 22ம் தேதி பட்டத்தரசி கிராம மண்டகப்படியில் தீர்த்தவாரி உற்ஸவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை