உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆதிதிராவிடர் அரசு பள்ளியில்  மாணவர்கள் சேர்க்கை பதிவு  

ஆதிதிராவிடர் அரசு பள்ளியில்  மாணவர்கள் சேர்க்கை பதிவு  

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மாவட்டத்தில் இத்துறையின் கீழ் 3 தொடக்க, 2 உயர்நிலை, 1 மேல்நிலை பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிகளில் 2024 - 25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. அரசு பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீத முன்னுரிமையும், 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க 7.5 சதவீத முன்னுரிமையும், பெண் கல்வியை ஊக்குவிக்க ஊக்க தொகையும், 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை, சீருடை, பாடப்புத்தகம் வழங்கப்படுகிறது. எனவே 5 வயதிற்கு மேற்பட்ட தங்கள் குழந்தைகளை ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் சேர்த்து பயன்பெறுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ