உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெல் வயலில் பாசி படர்வதை தடுக்க   வேளாண் துறையினர் ஆலோசனை 

நெல் வயலில் பாசி படர்வதை தடுக்க   வேளாண் துறையினர் ஆலோசனை 

சிவகங்கை: கோடை உழவில் வளர்ந்து வரும் நெல் வயலில் பாசி படர்வதை தடுக்க வேண்டும் என வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: மாவட்டத்தில் கோடையில் 700 எக்டேரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். மானாமதுரை, திருப்புவனத்தில் தற்போது நடவு செய்துள்ள வயல்களை ஆய்வு செய்ததில், பாசி படர்ந்துள்ளது. மண்ணில் அதிகளவு மணிச்சத்து மற்றும் பாசன நீரில் பைகார்பனேட் உப்பு அதிகம் இருந்தால், நிலத்தில் பச்சை அல்லது பழுப்பு நிற பாசி அதிகம் வளரும். எனவே விவசாயிகள் மண் மற்றும் பாசன நீரை சிவகங்கை தொண்டி ரோட்டில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தில் வழங்கி ஆய்வு செய்யவும்.பாசி படர்வதால் பயிருக்கு பிராண வாயு கிடைக்காமல் தடுத்து, வயலில் கரியமிலவாயு கலந்து நுரைத்து காணப்படும். மேலும் நுண்ணுாட்ட சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும்.வேர் வளர்ச்சி குறையும், வேர்களும் கருப்பாகி மண்ணில் பிடிமானம் குறையும்.நாற்றாங்காலிலும் நடவு வயலிலும் பாசி படர்வதை தடுக்க சாதாரணமாக வயலுக்கு இடும் அளவை விட கூடுதலாக பொட்டாஷ் இடுவதுடன் ஏக்கருக்கு ஒரு கிலோ தாமிர சல்பேட் 20 கிலோ மணலுடன் கலந்து இட வேண்டும்.நாற்றாங்காலில் ஒரு சென்ட்டுக்கு 2 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். பாசிபடர்ந்த வயல்களில் மணிச்சத்தான டி.ஏ.பி., அல்லது சூப்பர் பாஸ்பேட் இடக்கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை