உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா

அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா

சிவகங்கை: பதவி உயர்வு பட்டியலில் உள்ள அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் தர்ணா நடந்தது.கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ஜெயமங்கலம் தலைமை வகித்தார்.சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் உமாநாத் துவக்க உரை ஆற்றினார்.அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாநில செயலாளர் பாக்கியமேரி கோரிக்கையை விளக்கினார்.சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் வீரையா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினர்.சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சேதுராமன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் லட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ