மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
56 minutes ago
பயிற்சி முகாம்
56 minutes ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
57 minutes ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
57 minutes ago
சிலை பிரதிஷ்டை
58 minutes ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் அதிகாரிகளின் பார்வையில் மட்டுமின்றி மக்களின் பார்வையில் இருந்தும் பாலாறு மறைந்து வருவதால் வெள்ள காலங்களில் தண்ணீர் ஊருக்குள் புகுந்து பேரழிவை ஏற்படுத்தி விடுமோ என கிராம மக்கள் அஞ்சுகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் உருவாகும் பாலாறும், உப்பாறும் சிங்கம்புணரி அருகே ஒன்றாக கலந்து ஓடுகிறது. மேலப்பட்டி தொடங்கி கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, சிவபுரிபட்டி, காளாப்பூர், முறையூர் உள்ளிட்ட இடங்களில் பாலாற்றை தேடும் அளவிற்கு புதர்,கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. பல இடங்களில் கடுமையான மேடு பள்ளங்கள் உருவாகி ஆறுகளின் பாதையே மாறியுள்ளது. சிவபுரிபட்டி, சிலநீர்பட்டி, முறையூர் பாலங்களின் அருகே சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து பாலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.கனமழை காலங்களில் பெருவெள்ளம் வந்தால் ஆற்றின் வழித்தடமே மாறி அருகே உள்ள கிராமங்களில் பேரழிவு ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது. சமூக ஆர்வலர்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் பாலாற்றை கண்டு கொள்வதே இல்லை. ஆற்றில் வளர்ந்திருக்கும் முள்செடி, புதர்களை விவசாயிகளே அகற்றிக் கொள்ள அனுமதித்தால் கூட ஆறு சுத்தமானதாக இருந்திருக்கும்.பா.செந்தில்குமார், பா.ஜ., ஒன்றிய பொதுச்செயலாளர், சிங்கம்புணரி: ஒரு காலத்தில் பாலாற்றில் கை வைத்தாலே ஊற்று நீர் ஊறும் அளவிற்கு நீரோட்டம் இருந்ததுடன் ஆறும் செடி கொடிகள் இல்லாமல் சுத்தமானதாக இருந்தது. தற்போது மேடு பள்ளங்களுடன் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து ஆறு காடாகவே மாறிவிட்டது. எந்த இடத்தில் ஆறு உள்ளது எந்த இடத்தில் கரை உள்ளது என தெரியாத அளவிற்கு பல இடங்கள் உள்ளது. பெரிய வெள்ளம் ஏற்படுமாயின் அணைக்கரைப்பட்டி, பட்டகோவில்களம், மணப்பட்டி, காளாப்பூர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது. அதிகாரிகள் ஆறு நெடுகிலும் உள்ள செடி கொடி புதர்களை அகற்றி பாலாறையும் உப்பாறையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
56 minutes ago
56 minutes ago
57 minutes ago
57 minutes ago
58 minutes ago