உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உதவியாளர் பயிற்சி முகாம்

உதவியாளர் பயிற்சி முகாம்

குன்றக்குடி : குன்றக்குடி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கால்நடை மருந்தக உதவியாளர்களுக்கு ஆஸ்திரேலிய நிறுவனங்களுடன் இணைந்த பயிற்சி முகாம் துவங்கியது.குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தினர் கால்நடை மருந்தக உதவியாளர்களுக்கு கால்நடை பசுமை மேலாண்மை ஊக்குவிப்பாளர்கள்' என்ற தலைப்பில் பயிற்சி அளித்தனர். முகாமை கால்நடை பல்கலை விரிவாக்க கல்வி அலுவலர் அப்பாராவ் துவக்கி வைத்து, 'பசுமை இல்ல வாயு மற்றும் அதில் கால்நடைகளின் பங்கு, தனிப்பு நடவடிக்கை தொடர்பான காரணங்கள்' குறித்து பேசினார்.முதன்மை விஞ்ஞானி பிரசாத் பேசுகையில், 'பசுமை இல்ல வாயுக்களின் நேர்மறையான பின்னூட்ட சூழல்களின் உள்ளடக்கத்தை மேம்படுத்த' வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ