மேலும் செய்திகள்
14 யூனிட் ரத்தம் சேகரிப்பு
09-Sep-2024
திருப்புத்துார் : கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் என்.எஸ்.எஸ். காரைக்குடி அழகப்பாபுரம் லயன்ஸ் மற்றும் சிவகங்கை அரசு மருத்துவகல்லூரி இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர்.முதல்வர் கே.சசிக்குமார் வரவேற்றார். விவேகானந்தா கல்விக்குழுமத் தலைவர் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். லயன்ஸ் நிர்வாகி என்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.லயன்ஸ் தலைவர் ஆர்.பானுமதி முகாமை துவக்கவுரையாற்றினார்.சிவகங்கை அரசு மருத்துவமக்கல்லுாரி மருத்துவமனை மருத்துவஅலுவலர் பி.சித்து ஹரி முகாமை துவக்கி வைத்தார். லயன்ஸ் நிர்வாகிகள் ஒய். நாகூர்கனி, ஜி.விஜயகுமார், எல்.தமிழ்மாறன், கே.முத்து பங்கேற்றனர். செயலாளர் ஏ.நாகராஜன் நன்றி கூறினார்.
09-Sep-2024