உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாலிபர் கழுத்தை நெரித்து கொலை: தந்தை, சகோதரர் கைது

வாலிபர் கழுத்தை நெரித்து கொலை: தந்தை, சகோதரர் கைது

சிங்கம்புணரி : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிறுமருதுாரில் வாலிபரை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை, சகோதரரை போலீசார் கைது செய்தனர்.சிறுமருதுாரைச் சேர்ந்தவர் கண்ணையா 60. இவரது மகன்கள் சுரேஷ் 30, ரமேஷ், மகள் கார்த்திகைசெல்வி. மகளுக்கு வீடு கட்ட கண்ணையா இடம் ஒதுக்கி கொடுத்துள்ளார். இதை மகன் சுரேஷ் கண்டித்துள்ளார். இதுகுறித்து குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.ஜூலை 19 ல் இது தொடர்பாக தந்தை, மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் சுரேஷின் கழுத்தை நெரித்து தந்தை கண்ணையா, சகோதரர் ரமேஷ் ஆகியோர் கொலை செய்தனர். எஸ்.வி., மங்கலம் போலீசார் விசாரித்து தந்தை, சகோதரரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை