உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறுவன் கொடூர கொலை உறவினர்கள் மறியல்

சிறுவன் கொடூர கொலை உறவினர்கள் மறியல்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலையைச் சேர்ந்த ராஜா என்பவர் மகன் பிரவீன், 17. கோவையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கீழப்பசலைக்கு, மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து நண்பர்களோடு டூ - வீலரில் வந்தார். எதிரே ஒரு டூ - வீலரில் வந்த சிலர் அவர்களை மறித்தனர்.பிரவீன் மட்டும் அவர்களிடம் சிக்கினார்; நண்பர்கள் தப்பினர். அந்த சிறுவன் நேற்று காலை, தீயனுார் கண்மாயில் முகம் சிதைக்கப்பட்டு உடல் முழுதும் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார்.கீழப்பசலை கிராம மக்கள் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில், நேற்று காலை 9:00 மணியிலிருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் பேசி, கலைந்து போக செய்தனர். மூன்று மணி நேரத்திற்கு பின், போக்குவரத்து இயல்பானது.மானாமதுரை போலீசார் கூறுகையில், 'முன்பகை காரணமாக நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். விரைவில் கொலையாளிகள் பிடிபடுவர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை