உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டிக்கெட் பிரச்னையில் பஸ் கண்ணாடி உடைப்பு

டிக்கெட் பிரச்னையில் பஸ் கண்ணாடி உடைப்பு

சிங்கம்புணரி : எஸ்.புதுார் ஒன்றியம் கிழவயல் கிராமத்தில் நேற்று திருவிழா நடந்தது. இத்திருவிழாவுக்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள தனியாமலையில் இருந்து வந்திருந்த இளைஞர்கள் சிலர் ஊருக்கு திரும்ப அங்கு வந்த அரசு டவுன் பஸ்சில் ஏறினர்.நடத்துனர் டிக்கெட் எடுக்க கூறினார். போதையில் இருந்த இளைஞர்கள் எடுக்க முடியாது என்று கூறி டிரைவர், கண்டக்டரை தாக்கினர்.பஸ் கண்ணாடியையும் உடைத்தனர். காயமடைந்த டிரைவரும் கண்டக்டரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தப்பிய இளைஞர்களை உலகம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்