உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 

சிவகங்கை : சிவகங்கை, தேவகோட்டை வட்டாரத்தில் நாளை (ஜூலை 30) மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சிவகங்கை வட்டாரத்தில் இடையமேலுார், கண்டாங்கிபட்டி, சக்கந்தி, சாலுார் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு இடையமேலுார் சேவுகபெருமாள் கோயில் மண்டபத்திலும், தேவகோட்டை வட்டாரத்தில் உள்ள ஆராவயல், எழுவன்கோட்டை, கண்டதேவி, கண்ணங்கோட்டை, சண்முக நாதபுரம், தானாவயல், தென்னீர்வயல் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு கண்டதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறும்.இதில், பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை வழங்கி, நிவர்த்தி பெற்று செல்லலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்