மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
சிவகங்கை:சிவகங்கை, திருப்புத்துார், கல்லலில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, சிவகங்கை வட்டத்தில் தமறாக்கி தெற்கு, வடக்கு, இலுப்பக்குடி, ஒக்குபட்டி, மலம்பட்டி, அழகிச்சிபட்டி, குமாரபட்டி ஆகிய கிராமங்களுக்கு தமறாக்கி வடக்கு சமுதாயக்கூடம், கல்லல் வட்டாரத்தில் ஏ.கருங்குளம், அரண்மனைசிறுவயல், கீழப்பூங்குடி, மாலை கண்டான், நடராஜபுரம், பி.நெற்புகபட்டி, பனங்குடி, வேப்பங்குளம், வெற்றியூர் கிராமங்களுக்கு அரண்மனைசிறுவயல் நகரத்தார் சமுதாயக்கூடம், திருப்புத்துார் வட்டாரத்தில் திருக்கோளக்குடி, கண்டவராயன்பட்டி, மகிபாலன்பட்டி, ஒழுகமங்கலம், கொன்னத்தான்பட்டி, துவார், ரணசிங்கபுரம் ஆகிய கிராமங்களுக்கு கண்டவராயன்பட்டி பழையூர் பழனிகாவடி மண்டபத்தில் வைத்து காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறும். இதில், பொதுமக்கள் பங்கேற்று மனுக்கள் அளிக்கலாம்.