உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேங்காய் விலை உயர்ந்தும் விவசாயிகளுக்கு பலனில்லை; திருப்புவனத்தில் வரத்து குறைவால் சிக்கல்

தேங்காய் விலை உயர்ந்தும் விவசாயிகளுக்கு பலனில்லை; திருப்புவனத்தில் வரத்து குறைவால் சிக்கல்

திருப்புவனம் : தமிழக அளவில் தேங்காய் விலை உயர்ந்தபோதும், திருப்புவனம் பகுதியில் வரத்து குறைவால் எந்த பலனின்றி போனதாக திருப்புவனம் விவசாயிகள் புலம்பி தவிக்கின்றனர். வைகை ஆற்றை ஒட்டியுள்ள திருப்புவனம், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், கானூர், தூதை, மடப்புரத்தில் தென்னை விவசாயம் பெருமளவு மேற்கொள்ளப்படுகிறது. இங்கு ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இங்கு பெரும்பாலும் நெட்டை மரங்களே நடவு செய்யப்பட்டு வருகின்றன. நடவு செய்யப்பட்ட ஆறாவது வருடத்தில் இருந்து காய்க்க தொடங்கிவிடும். தென்னை மரங்களில் 45 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் அறுவடை நடைபெறும். பத்து வருடங்களுக்கு முன்பு வரை ஒரு மரத்திற்கு 30 முதல் 40 தேங்காய்கள் வரை கிடைத்து வந்தன. கடும் வறட்சி, நோய் தாக்குதல் உள்ளிட்டவற்றால் தேங்காய் விளைச்சல் கடும் பாதிப்பை சந்தித்துவருகிறது. கடந்த சில வருடங்களாக வெள்ளை ஈ தாக்குதலால் ென்னை மட்டைகள் காய்ந்து உதிர்வதால் தேங்காய் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. ஒரு மரத்திற்கு அதிகபட்சம் 10 காய்கள் வரையே கிடைப்பதால் விவசாயிகளுக்கு வெட்டு கூலி கூட கிடைப்பதில்லை.* தற்போது தேங்காய் விலை உயர்வு : திருப்புவனம் பகுதியில் தேங்காய் விளைச்சல் குறைந்த நிலையில், தமிழக அளவில் தேங்காய் விலை உயர்ந்துள்ளன. ஒரு கிலோ ரூ.45 ல் இருந்து 65 வரை உயர்ந்துவிட்டது. திருப்புவனத்தில் விளையும் காய்கள் கிலோவிற்கு 2 மட்டுமே இருக்கும். பொள்ளாச்சி காய்கள் 650 முதல் 1 கிலோ வரை இருக்கும். சில்லறை விற்பனையில் 250 கிராம் தேங்காய் ரூ.15 ல் இருந்து 25 வரை விற்கப்படுகின்றன. 650 கிராம் பொள்ளாச்சி காய்கள் ரூ.30 முதல் 50 வரை விற்கின்றனர். இது குறித்து துாதை விவசாயி காளை கூறியதாவது, மரத்திற்கு 30 காய்கள் கிடைத்த இடத்தில் பத்து காய்களே கிடைக்கின்றன. சாதாரண நாட்களில் ஒரு தேங்காய் ஆறு ரூபாய் என வாங்குகின்றனர். விளைச்சல் பாதிக்கப்பட்ட காலங்களில் பத்து ரூபாய் வரை வாங்குகின்றனர். ஆனால் கடைகளில் தேங்காய் வாங்கினால் ஒரு காய் ரூ.40 முதல் 50 க்கு விற்கப்படுகின்றன. திருப்புவனத்தில் தென்னை சார்ந்த தொழிலும் இல்லை. தென்னை விவசாயிகள் ஏராளமாக உள்ள இப்பகுதியில் தென்னை சார்ந்த தொழில் ஆரம்பித்தாலே தென்னை விவசாயிகளுக்கு மிகுந்த பயனளிக்கும், என்றார். திருப்புவனம் வட்டாரத்தில் விளையும் தேங்காய்கள் உள்ளுர் சந்தை தவிர வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் விற்பனையாகின்றன. வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து தேங்காய்கள் வாங்கும் போது அனைத்து காய்களுக்கும் ஒரே விலை நிர்ணயித்து வாங்கி அவற்றை உறித்து தரம் பிரித்து விற்பனை செய்கின்றனர். இதனால் வியாபாரிகளும் தங்களுக்கு செலவு அதிகரிப்பதாக புலம்புகின்றனர். வரும் 26ம் தேதி சிவராத்திரி திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தேங்காய்களின் விலை இன்னமும் அதிகரிக்க வாய்ப்புண்டு. திருப்புவனம் வட்டாரத்தில் தென்னை சார்ந்த தொழிற்சாலைகள் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்கும் என எதிர்பார்க்கின்றனர். /////


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை