| ADDED : ஜூலை 14, 2024 05:44 AM
காரைக்குடி, : காரைக்குடியில் டவுன் பஸ் படிகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.கண்டக்டர்களும் இதனை கண்டு கொள்வதில்லை.காரைக்குடியில் உள்ள பள்ளி கல்லுாரிகளுக்கு பள்ளத்துார், அமராவதிபுதுார், கல்லல், குன்றக்குடி, மானகிரி, புதுவயல் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் அரசு டவுன் பஸ்சையே நம்பியுள்ளனர். காரைக்குடி புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான மாணவ மாணவிகள் பஸ்சுக்காக காத்துக் கிடக்கின்றனர். சரியான நேரத்திற்கு பஸ்கள் வருவதில்லை. வரும் ஒரு சில பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் நெருக்கடியில் மாணவர்கள் படிகளில் தொங்கியபடி செல்ல வேண்டியுள்ளது.காலை மற்றும் மாலை நேரங்களில் சுற்றியுள்ள பகுதிக்கு கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.