உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கள்ளச்சாராயத்தை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராயத்தை ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

காரைக்குடி: காரைக்குடி பழைய ரயில் நிலையம் முன் ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.காரைக்குடி ரயில் நிலையம் முன் கேபிள் அமைக்க தோண்டிய குழிகளை மூடவும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரி செய்து சாலை அமைத்துக்கொடுக்கவும் 17 மற்றும்18வது வார்டுகளில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில்கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், இழப்பீட்டு தொகையை உயர்த்திக் கொடுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.நகரத் துணைத் தலைவர்அமானுல்லா தலைமையேற்றார். நகரத் தலைவர் முத்தையா ராமு, செயலாளர் தாமஸ் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, மாநிலத் துணைத் தலைவர்கள் ராமச்சந்திரன், ஜி.ராஜா, இந்திய கம்யூ., நகரச் செயலாளர் சிவாஜி காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை