உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்

மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்

திருப்புவனம் : ஆடி வெள்ளியை முன்னிட்டு மடப்புரத்தில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.ஆடியில் அம்மனை வழிபட்டால் வேண்டிய வரம் தருவாள் என்பது நம்பிக்கை, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே அம்மனை தரிசனம் செய்ய குவிந்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.மதியம் ஒரு மணிக்கு விநாயகருக்கு பூஜை செய்த பின் அடைக்கலம் காத்த அய்யனாருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஐந்து முக தீபம் காட்டப்பட்டது.பின் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் தொடங்கின. மதியம் ஒரு மணிக்கு தீபாராதனை காட்டப்பட்ட போது பெண்கள் பலரும் அருள் வந்து ஆடினர். அம்மனை தரிசனம் செய்த பக்தர்களுக்கு எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்பு அமைக்கப்பட்டு ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டிருந்தது. அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் திருப்புவனத்தில் இருந்து மடப்புரம் வரை பஸ் இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ