உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புரோக்கர்களை நம்ப வேண்டாம் தாலுகா அலுவலகத்தில் நோட்டீஸ்

புரோக்கர்களை நம்ப வேண்டாம் தாலுகா அலுவலகத்தில் நோட்டீஸ்

காரைக்குடி: காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் மக்கள்புரோக்கர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து அலுவலகத்தில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. காரைக்குடி தாலுகாவிற்கு மக்கள் ரேஷன் கார்டு, ஜாதி, வருமானச்சான்றிதழ், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இங்கு வரும் பொதுமக்களிடம் சான்றிதழ் பெற்று தருவதாக, புரோக்கர்கள் பணம் வாங்கி ஏமாற்றுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், தாலுகா அலுவலகத்தில் சமுதாய பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகம் உட்பட அதிகாரிகளின் அறை முன்பு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில், பொதுமக்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். பணம் கேட்டால் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடமோ, போலீசிடமோ புகார் அளிக்கலாம். எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை