உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பஸ்சை போதையில் இயக்கிய டிரைவர் கைது

அரசு பஸ்சை போதையில் இயக்கிய டிரைவர் கைது

தேவகோட்டை: காரைக்குடியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன் 50, இவரது மனைவி கவிதா 46, மகன் நகுல் 20 மூவரும் தேவகோட்டைக்கு சென்று விட்டு இரவு 8:00 மணிக்கு காரில் காரைக்குடிக்கு சென்றனர்.சடையன்காடு அருகே வேகத்தடுப்பில் கார் நின்றது. தேவகோட்டையில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் சென்றது.டிரைவர் தனபால் ஓட்டி வந்தார். அதிவேகமாக வந்த அரசு பஸ் வேகத்தடுப்பில் நின்ற கார் மீது மோதியதில் கார் நொறுங்கியது. காரில் இருந்த மூவரும் காயமடைந்தனர்.இருவர் தேவகோட்டை மருத்துவமனையிலும், படுகாயமடைந்த கவிதா காரைக்குடி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.அங்கு நின்ற மக்கள் அரசு பஸ் டிரைவர் தனபாலை பார்த்த போது டிரைவர் மதுஅருந்தி போதையில்இருந்தது தெரிந்தது. மக்கள் டிரைவரை தாக்கினர்.போதையில் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் ரோட்டில் படுத்து துாங்கினார். ஆறாவயல் போலீசார் வரவே டிரைவரை போலீசில் ஒப்படைத்தனர். போதை டிரைவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து சான்று பெற்றனர்.போதையில் பஸ் ஓட்டிய டிரைவர் தனபாலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி