உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பலவான்குடியில் தொடர் மின்வெட்டு மின்சாதனங்கள் சேதம்

பலவான்குடியில் தொடர் மின்வெட்டு மின்சாதனங்கள் சேதம்

காரைக்குடி ; காரைக்குடி அருகே பலவான்குடி, ஆத்தங்குடியில் அடிக்கடி ஏற்படும் மின்தடை, குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்சாதனங்கள் பழுதாகி வருகிறது.காரைக்குடி அருகே பலவான்குடி, ஆத்தங்குடி, சொக்கனேந்தல் திருவேலங்குடி பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஆத்தங்குடியில் டைல்ஸ் தயாரிக்கும் கம்பெனிகள் ஏராளமாக உள்ளன. இப்பகுதிகளில் பல நாட்களாக தொடர் மின்தடை, குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள், தொழில் துறை செய்வோர் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். குறைந்த மின்னழுத்தத்தால் வீட்டு மற்றும் தொழில் துறை சார்ந்த மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாவதாக மக்கள் புகார் அளித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையென மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இப்பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட மின் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ