உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உதவும் கரங்கள் திட்டத்தில்  நிதி உதவி வழங்கும் விழா 

உதவும் கரங்கள் திட்டத்தில்  நிதி உதவி வழங்கும் விழா 

சிவகங்கை: காரைக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் பணியின் போது உயிரிழந்த 2 ஊழியர்களின் குடும்பத்திற்கு உதவும் கரங்கள் திட்டம் மூலம் தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.காரைக்குடி அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் 11 கிளைகளில் புறநகர், டவுன் பஸ்கள் ஓடுகின்றன. கண்டக்டர், டிரைவர், அலுவலக ஊழியர், தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிகின்றனர்.இவர்கள் பணியின் போது உயிரிழந்தால், இவர்களது குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கும் நோக்கில் உதவும் கரங்கள் திட்டத்தை கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி செயல்படுத்தி வருகிறார்.இத்திட்டப்படி காரைக்குடி பொது மேலாளர் அலுவலகத்தில் பணியின் போது உயிரிழந்த 2 ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலையை பொது மேலாளர் கந்தசாமி வழங்கினார். இந்த விழாவில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை