உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை வைகை ஆற்றில் குப்பை எரிப்பு; எழும் புகை மூட்டத்தால் சுகாதாரக்கேடு அபாயம்

மானாமதுரை வைகை ஆற்றில் குப்பை எரிப்பு; எழும் புகை மூட்டத்தால் சுகாதாரக்கேடு அபாயம்

மானாமதுரை : மானாமதுரை வைகை ஆற்றுக்குள் குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.மானாமதுரை நகரில் வைகை ஆறு குறுக்கே செல்கிறது. நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை துாய்மை பணியாளர்கள் வாகனங்கள் மூலம் தாயமங்கலம் ரோட்டில் உள்ள மாங்குளம் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து வருகின்றனர்.மேலும் குப்பையிலிருந்து இயற்கை உரமும் தயாரித்து வருகின்றனர்.இந்நிலையில் மானாமதுரை நகராட்சி பகுதிகளில் தனியாக குப்பைகளை பொறுக்குபவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு தேவையில்லாத பொருட்களை ஆற்றில் கொட்டி தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் புகை மூட்டத்தால் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.நகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறியதாவது:மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு பகுதிகளிலும் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் சேகரிக்கும் குப்பைகளை முறையாக மாங்குளம் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று தரம் பிரித்து வருகின்றனர்.இந்நிலையில் தனியாக தெருக்கள் மற்றும் ரோடுகளில் குப்பைகளை பொறுக்குபவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு தேவையில்லாத பொருட்களை ஆற்றுக்குள் கொண்டு சென்று தீ வைத்து எரித்து வருகின்றனர்.இவர்களை ஏற்கனவே இவ்வாறு தீவைத்து எரிக்கக் கூடாது என எச்சரித்துள்ள நிலையில் மீண்டும் தொடர்ந்து இதனை செய்து வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை