உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலர் விபத்தில் சிறுமி பலி

டூவீலர் விபத்தில் சிறுமி பலி

சிவகங்கை: சிவகங்கையில் டூவீலர் விபத்தில் சென்னை சிறுமி தன்ஷிகா 10 பலியானார். சென்னை மணலி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் மகள் தன்ஷிகா 10. இவர் சிவகங்கையில் உள்ள தனது மாமா நாகராஜ் வீட்டிற்கு விடுமுறைக்கு வந்துள்ளார். நேற்று மாலை 4:00 மணிக்கு டூவீலரில் உறவினரான மானாமதுரை பாண்டியராஜன் மகள் ஹரிணி 19 என்பவருடன் தன்ஷிகா பின்னால் அமர்ந்து சென்றார். மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது ரோட்டில் தடுமாறியபோது பின்னால் அமர்ந்திருந்த சிறுமி தன்ஷிகா கீழே விழுந்தார். அப்போது எதிரே சிலிண்டர் ஏற்றி வந்த வாகனம் சிறுமி தன்ஷிகா தலையில் ஏறியதில் இறந்தார்.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி