உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராவல் மண் கடத்தியவர் கைது

கிராவல் மண் கடத்தியவர் கைது

சிவகங்கை:மலம்பட்டி குரூப் வி.ஏ.ஓ., ராஜேந்திரபிரபு 41. அவரது உதவியாளர் வி.புதுப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து விசாரித்தனர். லாரியில் இரண்டரை யூனிட் கிராவல் செம்மண் அள்ளி செல்வது தெரியவந்தது. வி.ஏ.ஓ., சிவகங்கை தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் மதுரை மாவட்டம் மேலுார் அருகே கீழாயூரை சேர்ந்த சேவுகமூர்த்தி 38, மற்றும்டிப்பர் லாரி உரிமையாளர் மதுரை மாவட்டம் நொண்டிகோவில்பட்டி பிரகாஷ் 42, மீது வழக்கு பதிவு செய்து டிரைவர் சேவுகமூர்த்தியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ