உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போக்குவரத்து போலீஸ் இல்லாத காளையார்கோவில்

போக்குவரத்து போலீஸ் இல்லாத காளையார்கோவில்

சிவகங்கை: காளையார்கோவிலில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.காளையார்கோவில் ஊராட்சி, சுற்றியுள்ள கிராமங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பிரசித்தி பெற்ற காளீஸ்வரர் கோயில், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு, தனியார் பள்ளிகள், தனியார் பொறியியல் கல்லுாரி உள்ளிட்டவை செயல்படுகிறது. இந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து காளையார்கோவிலை மையமாக வைத்தே நடக்கிறது.கிராம பகுதியில் இருந்து வெளியூர்களில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் டூவீலரில் காளையார்கோவில் வந்து அங்கிருந்து பஸ்களில் சிவகங்கை, தேவகோட்டை, கல்லல், காரைக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். டூவீலர், கார்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகரித்து விட்டன. இதன் காரணமாக போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப், கல்லல் ரோடு விலக்கு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றன.இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் செல்வதிலும் சிரமம் உள்ளது. திங்கள் கிழமை வாரச்சந்தை என்பதால் அந்தநாளில் சிவகங்கை தொண்டி ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்த காளையார்கோவிலில் போக்குவரத்து போலீசார் கிடையாது.இங்கு போக்குவரத்து காவல் நிலையம் அமைத்து தினமும் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். மாவட்ட எஸ்.பி., காளையார்கோவில் பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த பகுதியில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை