மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
21-Feb-2025
தேவகோட்டை : தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் மற்றும் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் உலக தாய்மொழி நாள் விழா பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா தலைமையில் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் ஜான் பாப் டீஸ்ட் வரவேற்றார். டாக்டர் கனியன் பூங்குன்றன் மாணவ எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். கவிதை நூலை ஹரி பிரசாத் அறிமுகப் படுத்தினார். வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் குரூஸ் நுால் மதிப்புரை வழங்கினார். வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் செயலாளர் ஸ்டீபன் மிக்கேல்ராஜ் ஏற்பாடுகளை செய்தார்.
21-Feb-2025