உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிரான்மலையில் பெய்யும் மழைநீர் வீணாகும் அவலம்

பிரான்மலையில் பெய்யும் மழைநீர் வீணாகும் அவலம்

பிரான்மலை, : சிங்கம்புணரி அருகே பிரான்மலை மற்றும் அதன் தொடர்களில் பெய்யும் மழைநீர் முறையான வரத்துக் கால்வாய்கள் இல்லாததால் நீர்நிலைகளுக்கு செல்லாமல் வீணாகி வருகிறது.பிரான்மலையை ஒட்டியுள்ள பிரதான மலை மற்றும் மலைத்தொடர்களில் பெய்யும் மழை நீர் அடிவார கிராமங்களில் உள்ள கண்மாய், ஊருணி, நீர் நிலைகளுக்கு செல்லும் விதமாக இயற்கையாக கால்வாய்கள் அமைந்திருந்தது.பல ஆண்டுகளுக்கு முன்பு அவை சீரமைக்கப்பட்ட நிலையில், மலைகளில் லேசாக மழை பெய்தாலும் கீழேயுள்ள நீர்நிலைகள் நிரம்பி வந்தன. ஆனால் சமீபகாலமாக வரத்துக்கால்வாய்கால் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டும் அடைபட்டும் கிடப்பதால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வருவதில்லை. பல கண்மாய்களில் சொட்டு நீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.குறிப்பாக பிரான்மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கண்மாய், புது ஊருணி, வேளாளர் குளம், கோயில் தெப்பமான அடையாஞ்சான் ஊருணி, பிடாரியம்மன் கோயில் ஊருணி ஆகியவை தண்ணீர் இல்லாமல் காட்சியளிக்கிறது.மலையிலிருந்து ஊற்றுநீர் வரும் வழித்தடங்கள் அடைபட்டு கிடப்பதை வனத்துறையினர் முறையாக பராமரித்து சீரமைத்தால் பிடாரியம்மன் ஊருணிக்கும் அதன் தொடர்ச்சியாக அடையாஞ்சான் ஊருணிக்கும் தண்ணீர் வந்து சேரும். அதேபோல் மற்ற பகுதியில் உள்ள கால்வாய்களையும் பொதுப்பணித்துறை, ஊராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைத்தால் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ