மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை:
09-Oct-2025
இளம் சாதனையாளர் உதவித்தொகை விண்ணப்பம்
09-Oct-2025
21 கிராமங்களில் உழவரை தேடி வேளாண்மை முகாம்
09-Oct-2025
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு 3888 பேர் பங்கேற்பு
09-Oct-2025
சிவகங்கை : கல்லலில் காவிரி குடிநீர் குழாய் பல இடங்களில் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாக புகார் எழுந்துஉள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லல் மற்றும்முத்துப்பட்டி, பாகனேரி வரை காவிரி குடிநீர் குழாய் பதித்து குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே குடிநீர் தொட்டி கட்டி அங்கிருந்து தெப்பக்குளம்,இந்திரா நகர் வழியே குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் எடுத்து செல்கின்றனர். குறிப்பாக தெப்பக்குளம் முதல் இந்திரா நகர் விலக்கு ரோடு வரை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் விரயமாகி வருகிறது. இதனால், கல்லல், இந்திராநகர், முத்துப்பட்டி, பாகனேரி உள்ளிட்ட மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி இந்த ரோட்டில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விரயமாகி ரோட்டை சேதப்படுத்தி வருகிறது.கல்லல் - இந்திரா நகர் வரை 1 கி.மீ., துாரத்தில் சேதமான இந்த ரோட்டை புதுப்பித்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெப்பக்குளம் முதல் இந்திரா நகர் விலக்கு வரை காவிரி குடிநீர் குழாய் உடைப்பால் குடிநீர் விரயமாகி வருகிறது. இதை தடுக்க, உடனே குடிநீர் வடிகால் வாரியத்தினர் சேதமான குழாய்களை செப்பனிட வேண்டும் என கல்லல் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
09-Oct-2025
09-Oct-2025
09-Oct-2025
09-Oct-2025