மேலும் செய்திகள்
மாட்டுவண்டி பந்தயம்
14-Aug-2024
சிவகங்கை: கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிவகங்கையில் நடந்த மாடு, குதிரை வண்டி பந்தயத்தில் 42 ஜோடி மாடுகள், 10 குதிரை வண்டிகள் பங்கேற்றன. சிவகங்கை - தொண்டி ரோட்டில் நடந்த இப்போட்டியில் பெரிய, சிறிய, பூஞ்சிட்டு பிரிவுகளாக மாடு மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பிரிவில் 10, சிறிய மாடு பிரிவில் 16, பூஞ்சிட்டு பிரிவில் 16 ஜோடிகள் என 42 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன.பெரிய மாடுகளுக்கு 8 சிறிய மாடுகளுக்கு 6, பூஞ்சிட்டு பிரிவுக்கு 5, குதிரை வண்டிக்கு 8 கி.மீ.,துாரம் எல்கை நிர்ணயிக்கப்பட்டது.சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்களை சேர்ந்த வண்டிகள் பங்கேற்றன. இதில் முதல் 5 இடங்களை பிடித்த மாடு, குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
14-Aug-2024