உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிக் பாக்ஸிங் வீரர்களுக்கு பாராட்டு

கிக் பாக்ஸிங் வீரர்களுக்கு பாராட்டு

சிவகங்கை : தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்தது. இதில் தமிழக அணி சார்பாக 102 சிறுவர் சிறுமியர் தலைமை பயிற்சியாளர் சுரேஷ்பாபு தலைமையில் பங்கேற்றனர். தமிழகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. கேடட் பிரிவில் 2வது இடத்தை பெற்றது.இதில் சிவகங்கை சார்பில் 6 சிறுவர் சிறுமியர் தமிழ்நாடு அணி சார்பாக போட்டியில் பங்கேற்றனர். ரா.மனுஸ்ரீ தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தையும், ரா.ருட்வின் பிரபு வெள்ளி பதகத்தையும், ரா.ரூபன் சாய்சிவன் வெண்கல பதகத்தையும் பெற்றனர்.பயிற்சியாளர் குணசீலன், சிவகங்கை கிக்பாக்ஸிங் அசோசியேசன் சங்க தலைவர் சதிஷ் மற்றும் சிவகங்கை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ரமேஷ் கண்ணன் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை