உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தொடர் மழையால் பசுமையாக காட்சியளிக்கும் நிலம் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி

தொடர் மழையால் பசுமையாக காட்சியளிக்கும் நிலம் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி

திருப்புவனம், : திருப்புவனம் வட்டாரத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழை காரணமாக வயல்களில் புற்கள் முளைத்துள்ளதால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்திலேயே திருப்புவனம் வட்டாரத்தில் தான் அதிகளவு கால்நடை வளர்க்கப்படுகிறது. செல்லப்பனேந்தல். அல்லிநகரம், கீழராங்கியன், கீழடி,கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் கறவை மாடு, செம்மறியாடு, வெள்ளாடு உள்ளிட்டவை அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.நான்கு வழிச்சாலை, நகர விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் விவசாய நிலங்கள் பிளாட்களாக மாறிய நிலையில் மேய்ச்சலுக்கு ஏற்ற நிலங்கள் இன்றி கால்நடை வளர்ப்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். விவசாய காலங்களில் மேய்ச்சலுக்கு ஏற்ற நிலங்கள் இன்றி கால்நடை தீவனங்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருவதால் விவசாய நிலங்கள், வரப்பு உள்ளிட்டவற்றில் புற்கள் முளைத்து பசுமையாக காட்சியளிக்கின்றது. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கீழராங்கியன் செல்வராஜ் கூறுகையில்: செம்மறியாடு குட்டி போட்டு இரு வருடங்களில் விற்பனைக்கு தயாராகி விடும். காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை செம்மறியாடுகள் மேய்ச்சலிலேயே இருக்கும்.அப்போதுதான் விரைவில் எடை கூடும், கடந்த ஒரு வாரம் பெய்த மழை காரணமாக புற்கள் முளைத்துள்ளன. இனி செப்டம்பர் கடைசியில் தான் விவசாய பணிகள் தொடங்கும். அதுவரை மேய்ச்சலுக்கு கவலை இல்லை. மழை பெய்யாவிட்டால் ஊர், ஊராக ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும், இல்லையென்றால் வேம்பு, புளிய மர இலைகளை வெட்டி கொண்டு வந்து போட வேண்டும் என்றார்.மழை காரணமாக விவசாய நிலங்கள், வரத்து கால்வாய்கள் உள்ளிட்டவற்றில் மழை நீர் தேங்கி இருப்பதால் ஆடுகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை