உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மேல்குடி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

மேல்குடி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே மேல்குடி பூரண, புஷ்கலாம்பாள் சமேத ஆதீனமிளகி அய்யனார், வல்ல நாட்டு கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.ஜூலை 10 காலை 8:00 மணிக்கு திருமுறை, கணபதி ஹோமம், அனுக்ஞை, நவகிரஹ ஹோமம், தன பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கி இரண்டு நாட்கள் காலை, மாலை நடந்தன. நேற்று காலை 7:00 மணிக்கு கோபூஜை, கஜலெட்சுமி பூஜையுடன் நான்காம் கால யாகசாலை பூஜை நடந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.தொடர்ந்து யாகசாலையிலிருந்து சிவாச்சார்யார்களால் கடம் புறப்பாடாகி கோவில் கும்ப கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர், ஏற்பாட்டினை கிராமத்தார்கள், நகரத்தார்கள், குலதெய்வ வழிபாட்டாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை