உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மர்

அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மர்

எஸ்.புதுார், : எஸ்.புதுார் ஒன்றியத்தில் பல ஆண்டுகளாக பழுதடைந்த மின்கம்பங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது.இவ்வொன்றியத்தில் 21 ஊராட்சிகளில் பல இடங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மின்கம்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் சில துருப்பிடித்து, சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. கட்டுக்குடிப்பட்டி போன்ற பகுதிகளில் மாணவர்கள் பயணிக்கும் சாலைகளில் இந்த மின்கம்பம் உள்ளதால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். ஆபத்தான டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்களை உடனடியாக மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ