உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு; ஆக., 22 ல் கும்பாபிேஷகம்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு; ஆக., 22 ல் கும்பாபிேஷகம்

இளையான்குடி: இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷக விழா முகூர்த்தாக்கால் நடும் நிகழ்வுடன் நேற்று துவங்கியது. ஆக., 22ல் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. இங்கு, பங்குனி பொங்கல் விழா 10 நாட்கள் நடைபெறும். இவ்விழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நேர்த்தி கடன் செலுத்தி செல்வர். இந்நிலையில் கோயிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் நடந்து முடிந்து, ஆக., 22ல் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.

முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி

கும்பாபிேஷக விழா தொடங்குவதன் நிகழ்வாக நேற்றுகோயில் முன் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.கிராம மக்கள் முகூர்த்த காலுடன் ஊர்வலமாக கோயிலை சுற்றி வலம் வந்து கோயிலுக்கு முன்பாக உள்ள திடலில் முகூர்த்த கால் ஊன்றினர். முத்துமாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், தாயமங்கலம் அய்யாச்சாமி மற்றும் கோயில் ஊழியர்கள், கிராமத்தார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை