உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தெருநாய்களுக்கு கு.க., ஆப்பரேசன் தவறான தகவல் தரும் அதிகாரிகள்

தெருநாய்களுக்கு கு.க., ஆப்பரேசன் தவறான தகவல் தரும் அதிகாரிகள்

திருப்புவனம் ; திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒரே பதிலை இரண்டு முறை அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.திருப்புவனம் புதூர், கோட்டை, சேதுபதிநகர், வடகரை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் ஆடு, கோழி, பன்றி, மீன் இறைச்சி கடைகள் உள்ளன.இந்த இறைச்சி கடைகளில் மீதமாகும் கழிவுகளை குழிதோண்டி புதைத்து அழிக்காமல் கடை உரிமையாளர்கள் வீதிகளில் வீசி எறிகின்றனர். இதனை உண்பதற்காக இறைச்சி கடைகள் அருகே கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் உலா வருகின்றன. திருப்புவனத்தில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உலா வருகின்றன.இறைச்சி கடைகள் மூடிய பின் இறைச்சி கிடைக்காமல் தெரு நாய்கள் ரோட்டில் நடந்து செல்பவர்களை கடித்து காயப்படுத்துகின்றன. டூவீலர், சைக்கிள்களில் செல்பவர்களை விரட்டுவதால் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.கடந்த பத்து வருடங்களாக திருப்புவனம் பேரூராட்சி சார்பில் தெரு நாய்களை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படவே இல்லை. இதனால் தெரு நாய்கள் பல பெருகி கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன.தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தாக்கி கோயில் மாடுகள், வளர்ப்பு மாடுகளையும் கடிப்பதால் அவைகளும் வெறி கொண்டு அலைகின்றன.இது குறித்து முத்துராஜா கூறியதாவது: தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இவற்றை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய இரு வருடம் விண்ணப்பித்தேன்.இரண்டுக்கும் தனித்தனியே கால்நடை மருத்துவர்கள் மூலம் தெருநாய்களுக்கு கு.க., ஆப்பரேசன் செய்துள்ளதாக ஒரே பதிலை தந்துள்ளனர். தெரு நாய்களை பிடிக்க திருப்புவனத்தில் நாய் பிடிக்கும் வாகனமோ, ஆட்களோ இல்லை.மானா மதுரையில் இருந்து தான் வரவேண்டும். மாவட்ட அளவில் 3 ஆண்டாக கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. திருப்புவனம் தாலுகாவில் ஒரே ஒரு கால்நடை மருத்துவர் சுழற்சி முறையில் ஏழு கால்நடை மருந்தகங்களை கவனிக்க வேண்டி உள்ளது.இந்நிலையில் நாய்களுக்கு கு.க., ஆப்பரேஷன் செய்ததாக தவறான தகவல் கொடுத்துள்ளனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ