மேலும் செய்திகள்
சேதமடைந்த நிழற்குடை சீரமைக்க எதிர்பார்ப்பு
31-Jan-2025
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே திண்டுக்கல் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கே.வைரவன்பட்டி பழைய பயணியர் கூடத்தை அகற்ற பொதுமக்கள் கோரியுள்ளனர்.திருப்புத்துார் திண்டுக்கல் செல்லும் ரோடு தேசிய நெடுஞ்சாலையாக்கப்பட்டு கொட்டாம்பட்டி -திருப்புத்துார் வரை இருவழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது. அப்போது பல கிராமங்களுக்கு பஸ் நிறுத்தங்களில் புதிய பயணியர் நிழற் கூடம் அமைத்தனர். அதில் கே.வைரவன்பட்டி பஸ் நிறுத்தமும் ஒன்று. அதற்கு முன் அப்பகுதியில் பழைய பயணியர் நிழற்கூடமும் இருந்தது. புதிய பயணியர் கூடம் அமைத்த பிறகு பழைய நிழற்கூடத்தை அகற்றாமல் விட்டு விட்டனர். இதனால் தற்போது புதிய கூடத்தில் நின்று பயணிகள் பார்த்தால் ரோட்டில் பஸ் வருவது தெரியாத நிலை உள்ளது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் உள்ளது. இதனால் அந்த பழைய பயணியர் நிழற் கூடத்தை அகற்ற பொதுமக்கள் கோரியுள்ளனர்.
31-Jan-2025