மேலும் செய்திகள்
நில அளவை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
02-Mar-2025
நில அளவைக்கு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்
05-Mar-2025
சிவகங்கை,: நிலங்களை அளவீடு செய்ய இ- சேவை மையங்கள் மூலம் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.சிவகங்கை மாவட்டத்தில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய, தாசில்தார் அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் செய்து வந்தனர். அங்கு நேரடியாக செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான நில அளவை கட்டணத்தை இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்கலாம். நில அளவை செய்வதற்கான தேதி அலைபேசி மூலம் தெரிவிக்கப்படும். இதற்கான சான்றினை https://eservices.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலம் பெறலாம்.
02-Mar-2025
05-Mar-2025