நீண்ட இழுபறிக்கு பின் வாரச்சந்தை திறப்பு
சிவகங்கை : சிவகங்கையில் நீண்ட இழுபறிக்கு பின் வாரச்சந்தையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.சிவகங்கையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து காரைக்குடி அழகப்பா பல்கலையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சிவகங்கை 4வது வார்டில் ரூ.3.89 கோடி மதிப்பீட்டில் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட வாரச்சந்தையை காரைக்குடியில் இருந்து திறந்து வைத்தார். பின்னர் சிவகங்கையில் நகராட்சி தலைவர் துரைஆனந்த் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். சந்தையில் 172 காய்கறிகடைகள், 12 மீன் கடைகள், 1 காவலர் அறை, ஆண், பெண் கழிப்பறை, பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டு கட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. சந்தை கட்டடம் செப்.18 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.அன்று முதல் வியாபாரிகள் புதிதாக கட்டப்பட்டுள்ள சந்தை கட்டடத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.நிகழ்ச்சியில் மேலாளர் கென்னடி, துணை தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் சேதுநாச்சியார், ஜெயகாந்தன், வீனஸ் ராமநாதன், சரவணன், மகேஷ், முன்னாள் கவுன்சிலர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.