உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலீசார் விழிப்புணர்வு

போலீசார் விழிப்புணர்வு

சிவகங்கை: சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம் தலைமையில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் விழிப்புணர்வு நடத்தினர். நிதி மோசடி, சமூக ஊடகங்கள் தொடர்பான சிக்கல், போலி கடன் பயன்பாடு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு தொடர்பான மோசடி, ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக மோசடி, ஆன்லைன் பரிசு மோசடி குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், டாக்டர்கள் மத்தியில் ஏற்படுத்தினர். ஆன்லைன் தொடர்பான புகார்களுக்கு ஹெல்ப்லைன் எண் 1930, மற்றும் இணையதளம் வாயிலாக புகார் தெரிவிக்க www.cybercrime.gov.inஎன்ற இணையதள முகவரியும், பெண்கள் குறித்த புகார்களை தெரிவிக்க 181, குழந்தைகள் குறித்து உதவி எண் 1098 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவர்கள், டாக்டர்கள் பங்கேற்றனர். இன்ஸ்பெக்டர் தேவி, எஸ்.ஐ., முருகானந்தம், மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணா, நிலைய மருத்துவர் மகேந்திரன், துணை நிலைய மருத்துவர்கள் முகமதுரபிக், தென்றல் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை