மேலும் செய்திகள்
ஊரணியில் குப்பை கொட்டுவதால் அவதி
09-Sep-2024
முதியவர் பலி சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் அருகே ஞானசமுத்திரம் செல்வராஜ் 65. இவர் இங்குள்ள அம்மன் கோயில் ஊரணியில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.டூவீலர் விபத்து : வாலிபர் பலி சாலைக்கிராமம்: வடக்கு சாலைகிராமம் நடராஜன் மகன் சந்தோஷ் 21. இவர் டூவீலரில் சென்றபோது, வடக்கு வண்டல் கிராமம் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்ததில், பலத்த காயமுற்றார். சாலைக்கிராமம் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு செல்லும் வழியில் பலியானார். சாலைக்கிராமம் போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணிடம் 7 பவுன் வழிப்பறி இளையான்குடி: இளையான்குடி அருகே பஞ்சாத்தியை சேர்ந்த கண்ணன் மனைவி வசந்தா. இவர் தன் மகள் மதுஸ்ரீயுடன் துகவூரில் இருந்து சாலைக்கிராமத்திற்கு டூவீலரில் சென்றார். பின்னால் டூவீலரில் வந்த மர்ம நபர்கள் வசந்தா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை வழிப்பறி செய்து தப்பினர். இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Sep-2024