உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

துவரம் பருப்பு மூடை திருட்டுசிவகங்கை: சிவகங்கை அருகே வாணியங்குடி ரேஷன் கடை (கடை எண்: என்.என்.384) விற்பனையாளர் தமிழரசு 59. இவர் ஏப்., 29 அன்று மாலை ரேஷன் கடையை பூட்டி சென்றார். மீண்டும் மே 2ம் தேதி வந்து பார்த்த போது, கடையில் இருந்த ரூ.10,500 மதிப்புள்ள 7 துவரம்பருப்பு மூடை திருடப்பட்டிருப்பது தெரிந்தது. சிவகங்கை எஸ்.ஐ., நாசர் விசாரிக்கிறார்.தடை மீறி ரேக்ளா ரேஸ், மஞ்சுவிரட்டு10 பேர் மீது வழக்குநாச்சியாபுரம்: நாச்சியாபுரம் அருகே மானகிரி - கல்லல் ரோட்டில் அனுமதியின்றி மே 2 ம் தேதி காலை 7:00 மணிக்கு ரேக்ளா ரேஸ் நடத்தினர். மானகிரி வி.ஏ.ஓ., சேதுபதி புகாரின்படி, மானகிரியை சேர்ந்த அன்பரசன் 26, கார்த்திகேயன் 28, மகேஸ்வரன் 24, ஆரோக்கிய ஜெயின் லிண்டோ 22, ஆறுமுகம் 32, ஆகிய 5 பேர் மீது நாச்சியாபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.* காரைக்குடி அருகே அமராவதிபுதுாரில் அனுமதியின்றி மே 2 ம் தேதி கைகாட்டி திடலில் மஞ்சுவிரட்டு நடத்தினர். வி.ஏ.ஓ., முனீஷ்முரளி புகாரில், கண்ணன் 46, நடராஜன் 64, வேலு 57, வேல்முருகன் 62 உட்பட 5 பேர் மீது சோமநாதபுரம் எஸ்.ஐ., பிரனிதா வழக்கு பதிந்தார்.அனுமதியின்றி மண் அள்ளிய 2 பேர் கைது லாரிகள் பறிமுதல்மானாமதுரை: மானாமதுரை அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்து, மண் அள்ளும் இயந்திரம், 2லாரிகளை பறிமுதல் செய்தனர். தப்பிய 2 பேரை தேடி வருகின்றனர்.மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் முத்துராமலிங்கபுரம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக அரசு அனுமதி இன்றி கிராவல் மணல் கடத்தி வருவதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து மானாமதுரை போலீஸ் பூபதி ராஜா மற்றும் போலீசார் சோதனைக்கு சென்றனர். அங்கு இயந்திரங்களைக் கொண்டு லாரிகளில் டிராவல் மணல் அள்ளி கொண்டிருந்த இளையான்குடி அருகே உள்ள மேலாயூர் கிராமத்தைச் சேர்ந்த சிவாஜி மகன் மதிவாணன்40, கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் ராஜா 34, 2 பேரையும் கைது செய்து 2மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.திருப்புத்துாரில் பேட்டரி திருட்டுதிருப்புத்துார்: திருப்புத்துாரில் வாகன பேட்டரிகள் தொடர்ந்து திருடப்படுவதாக வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.திருப்புத்துார் நகரில் கடந்த சில மாதங்களாகவே நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் இரவு நேரங்களில் பேட்டரிகள் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக வீடுகளுக்கு முன்பு தெருக்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் இரவு நேரங்களில் பேட்டரி திருடு போகிறது. தாலுகா அலுவலக ரோடு, சீதளி வடகரை பகுதியில் பேட்டரி திருட்டு அதிகமாக நடக்கிறது.கடந்த வாரம் கல்லாகுழிச்தெருவில் வீடு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் பேட்டரி திருடு போனது. திருடு குறித்து பலரும் போலீசில் புகார் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி