உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை கலெக்டர் அலுவலக வாசலில் போலீஸ் பாதுகாப்பு

சிவகங்கை கலெக்டர் அலுவலக வாசலில் போலீஸ் பாதுகாப்பு

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயற்சித்தனர்.இந்த சம்பவத்திற்கு பின்பு நேற்று ஒரு நுழைவு வாயிலுக்கு 2 பேர் வீதம் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஜூலை 5 ம் தேதி மதியம் காரைக்குடியை சேர்ந்த சரிதா 39, இவரது மகள் மகாலட்சுமி 19, இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தனர். அன்றைய தினம் ஒரே ஒரு பெண் எஸ்.ஐ., மட்டுமே பணியில் இருந்தார். அன்றைய தினம் கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் லால்வேனா, கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒரு பெண் எஸ்.ஐ., மட்டுமே இருந்ததால், தீக்குளிக்க முயற்சித்த இரு பெண்களை தடுக்க முடியாமல் ஒரு வழியாக போராடி, பத்திரிகையாளர்கள் துணையுடன் பெண்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தார்.இச்சம்பவத்திற்கு பின் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு வருவோர் மனுவுடன் மண்ணெண்ணெய், பெட்ரோல் உள்ளிட்டவற்றை எடுத்து வருகிறார்களா என பரிசோதனை செய்ய, கலெக்டர் அலுவலக முன்பக்கம் உள்ள மூன்று நுழைவு வாயிலில் ஒரு வாசலுக்கு 2 போலீசார் வீதம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.இவர்கள் மனுவுடன் வருவோரை நன்கு பரிசோதனை செய்த பின்னரே கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை