உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் பிரசாரம்; ஆர்வம் இல்லாத அ.தி.மு.க.,

திருப்புவனத்தில் பிரசாரம்; ஆர்வம் இல்லாத அ.தி.மு.க.,

திருப்புவனம் : திருப்புவனம் தாலுகாவில் பிரசாரம் செய்ய இதுவரை அ.தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டாதது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.தி.மு.க., மீதான வெறுப்பை அ.தி.மு.க.,விற்கு சாதகமாக மாற்றலாம் என்ற நிலையில் திருப்புவனம் தாலுகாவில் இதுவரை அ.தி.மு.க., சார்பில் பிரசாரம் மேற்கொள்ள எந்த வித நடவடிக்கையும் இல்லை. நடிகை விந்தியா பிரசாரத்திற்கு வந்த போது பெண்கள் கூட்டம் அதிகம் இருந்த நிலையில் மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் யாருமே வரவில்லை. திருப்புவனம் நகரை விட சுற்று வட்டார 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 173 கிராமங்களில் அ.தி.மு.க.,விற்கு செல்வாக்கு அதிகம், அதிலும் திருப்பாச்சேத்தி உள்பட பல கிராமங்களில் செல்வாக்கு அதிகம், லோக்சபா தேர்தலுக்கு திருப்புவனம் பகுதியில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக இன்று வரை பிரசாரம் அதிகளவில் மேற்கொள்ளப்படாததது அ.தி.மு.க., தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ