உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாரிவேட்டை நடத்தினால் வழக்கு

பாரிவேட்டை நடத்தினால் வழக்கு

சிவகங்கை: மஹா சிவராத்திரிக்கு வனப்பகுதிகளில் பாரிவேட்டை நடத்தினால் வழக்கு பதியப்படும் என சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பிரபா தெரிவித்தார்.அவர் கூறியதாவது, இன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட வனம் மற்றும் பிற பகுதிகளில் கம்பு, வேட்டை நாய் துணையுடன் பாரி வேட்டையாட தடை உள்ளது. அதே போன்று வன விலங்குகளை வேட்டையாடினாலும் தமிழ்நாடு வனச்சட்டம் 1882 மற்றும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். பாரி வேட்டையில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை