உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடமுழுக்கு நடந்த கோவிலில் மூன்று நாட்களில் கொள்ளை

குடமுழுக்கு நடந்த கோவிலில் மூன்று நாட்களில் கொள்ளை

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மேலப்பிடாவூர் கிராமத்தில் உள்ள பூர்ணாதேவி, புஷ்கலா தேவி சமேத வெள்ளாரப்பன் என்ற முத்தையா அய்யனார் கோவிலில், கடந்த 8ல் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு கிராம மக்கள், பூஜாரிகள் கோவிலை பூட்டிச் சென்றனர்.நேற்று காலை கோவில் கதவு உடைக்கப்பட்டிருந்தது. கிராம மக்கள் சென்று பார்த்தபோது, கொள்ளையர்கள் கருவறையின் நிலைக்கதவுகளை உடைத்து உள்ளே இருந்த, 5 கிலோ வெள்ளிக்கவசம், 30 கிலோ பித்தளை, வெண்கலப் பொருட்கள், உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரிந்தது.அதுபோல, 2 நாட்களுக்கு முன், வருஷாபிஷேகம் நடந்த மதுரை வீரன் சுவாமி கோவிலிலும் கொள்ளை நடந்துள்ளது. அங்கிருந்த 2 குத்துவிளக்குகளையும், உண்டியலிலிருந்த பணத்தையும் திருடிச் சென்று விட்டனர். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை