பள்ளி ஆண்டு விழா
சிவகங்கை: சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா நடந்தது.பள்ளி முதல்வர் மனோஜ்குமார் சர்மா வரவேற்றார். கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். சி.பி.எஸ்.இ., தேர்வில் முதலிடம் பிடித்த 10ம் வகுப்பு மாணவர்கள், விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், சான்றினை கலெக்டர் வழங்கினார். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் செல்வம் நன்றி கூறினார்.