உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை நகராட்சிக்கு தேர்வு நிலை அந்தஸ்து: மக்கள் தொடர் வலியுறுத்தல்

சிவகங்கை நகராட்சிக்கு தேர்வு நிலை அந்தஸ்து: மக்கள் தொடர் வலியுறுத்தல்

சிவகங்கை : சிவகங்கை நகராட்சியை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து, தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சிவகங்கை 1965ம் ஆண்டு 3ம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. மாவட்ட தலைநகராக உருவான பின் இந்நகராட்சி 2ம் தரத்திற்கு உயர்த்தப்பட்டது. 1998ம் ஆண்டு முதல் முதல் தர நகராட்சியாக விளங்கி வருகிறது. 6.97 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ள இந்நகரில்91ம் ஆண்டு கணக்கெடுப்பு படி 40 ஆயிரத்து 403 பேர் வசித்தனர். இன்றைக்கு சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளின் மக்கள் தொகை 60 ஆயிரத்திற்கும் மேல். இந்நிலையில் சிவகங்கையை முதல் நிலை நகராட்சியில் இருந்து தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என இந்நகர் மக்கள் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக சிவகங்கைக்கு அருகே வளர்ந்து வரும் காஞ்சிரங்கால், வாணியங்குடி, ரோஸ்நகர் உள்ளிட்ட பகுதிகளை சிவகங்கையுடன் இணைத்து, தேர்வு நிலை அந்தஸ்து வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

3 ஆண்டு வருவாய் ரூ. 14.92 கோடி

நகராட்சி தலைவர் துரை ஆனந்த் கூறியதாவது: சிவகங்கை நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் தேர்வு நிலை நகராட்சியாக்க தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளோம். தற்போது இந்நகராட்சியின் கடந்த 3 ஆண்டு (2021 - 2024) ரூ.14.92 கோடியாக உள்ளது. நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அருகில்உள்ள கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து, சிவகங்கைக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை நகராட்சி மானிய கோரிக்கையில் வெளியிட கோரி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி